அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு 16 கோடி - தமிழக அரசு அனுமதி - Kalvimurasutn

Latest

Tuesday, December 1, 2020

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு 16 கோடி - தமிழக அரசு அனுமதி

 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு உதவ, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில், 16 கோடி ரூபாயில், சுழல் நிதி உருவாக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



அரசு பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியது.

அதன்படி, மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களால், சுமை ஏற்படாமல் இருக்க, 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்களை நடைமுறைப்படுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர, ஆணை பெற்றுள்ள, அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்த, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில், சுழல் நிதி உருவாக்க, முதல்வர் உத்தரவிட்டார்.

அந்த நிதியில் இருந்து, மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்களை, அரசு நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என, முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, 16 கோடி ரூபாயில், சுழல் நிதி உருவாக்க அனுமதி அளித்து, சுகாதாரத் துறை சார்பில், நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment