வரும் 7 ம் தேதி பொறியியல் , கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் வரும் 15ஆம் தேதி வரை ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
தேர்வை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைப்பதா? அல்லது மீண்டும் கல்லூரி திறப்பு தேதியை தள்ளி வைப்பதா? என உயர்கல்வித் துறை தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வருடன், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்திய பிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment