நாட்டின் பிற மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இன்னும் அது குறித்து அரசு முடிவெடுக்காததன் காரணத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எப்போது பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் இதுவரை 8,14,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 12,069 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
CBSE பொதுத்தேர்வு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட புதிய செய்தி
கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு உறுதியாக தற்போது வரை முடிவெடுக்காமல் உள்ளது. இதற்கு காரணம், பிற மாநிலங்களில் ஊரடங்குக்கு மத்தியில் பள்ளிகளை திறந்து பின்னர் மூடி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தான் தமிழக அரசு இதுவரை பள்ளிகள் திறப்பில் அவசரப்படாமல் உள்ளது என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சர்.
No comments:
Post a Comment