ஒடிசாவில் ஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Sunday, January 3, 2021

ஒடிசாவில் ஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு

 ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஒடிசா மாநில பள்ளிக்கல்வித் துறை சனிக்கிழமை அறிவித்தது

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment