இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.....
கொரோனாவால் இந்த ஆண்டு முழுவதும் வகுப்புகள் நடைபெறவில்லை கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடையவில்லை.
எனவே கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளை போன்று மாணவர்களுக்கும் இந்த ஆண்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் தேர்வு எழுத அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கோரிக்கையை முன்வைக்கிறோம்
(ஆன்லைன் தேர்வு என்பது நேரடியாக கணினியில் எழுதுவது அல்ல.)
(மாணவர்கள் வினாத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் பெற்று வீட்டில் விடையை எழுதி விடைத்தாள்களை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் இதுதான் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது)
பாபு மாநில அமைப்புச் செயலாளர்
முருகன் மாநில செயற்குழு உறுப்பினர்
ரமேஷ் மாவட்ட தலைவர்
பெளிக்ஸ் லியோ மேத்தா மாவட்ட பொருளாளர்
No comments:
Post a Comment