தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பற்றியும் தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. 100-க்கும் குறைவாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படாது. அவர்கள் பக்கத்தில் இருக்கும் வேறு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
இதே போல் 10-ம் வகுப்பு தேர்வுக்கும் தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களை வெகுதூரம் அலைய வைக்ககூடாது. எனவே அந்த அந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத மையங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே பள்ளியில் தேர்வு எழுத அனுமதித்தால் தங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், பறக்கும் படையினர், அதிகாரிகள் என்று பணியாளர்கள் அதிகம் தேவைப்படுவார்கள்.
இன்னும் 2 வாரத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த தருணத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா? என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment