தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் வகுப்பு IV- ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் ( பணி விதிகள் ) சட்டம் 2016 , பிரிவு 47 ( 1 ) ன் படி தற்காலிக அடிப்படையில் , அவர்கள் பணி ஏற்கும் நாள் முதல் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் , மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு , தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி 2 ( c ) III- ன் கீழ் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பணி மாறுதலில் நியமனமும் வழங்கியும் பார்வையில் காணும் அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்காணும் அரசாணையில் பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது . இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment