தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு விரைவில் துவக்கம் - Kalvimurasutn

Latest

Wednesday, February 10, 2021

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு விரைவில் துவக்கம்

 அனைத்து வகுப்புகளும் விரைவில் துவக்கம் .



 பள்ளிகளில், அனைத்து வகுப்புகளையும் துவங்குவது குறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். சுகாதாரத் துறை ஒப்புதலை பெற்ற பின், முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

 கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கல்லுாரிகளில், அனைத்து வகுப்புகளும், நேற்று முன்தினம் துவங்கின. பள்ளிகளில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரை, வகுப்புகள் துவங்கியுள்ளன.

  இந்நிலையில், மீதமுள்ள, ஒன்று முதல், எட்டு வரையான வகுப்புகளை துவங்குவது தொடர்பாக, பள்ளி கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது. புதுச்சேரி பள்ளிகளில், ஒரு மாதமாக, அனைத்து வகுப்புகளும் நடந்து வருகின்றன. அங்கு, கொரோனா பரவல் இல்லை என்பது, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

 அதன்படி, தமிழகத்திலும் அனைத்து வகுப்புகளையும் துவங்கலாம் என, பள்ளி கல்வி துறை கருதுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, சுகாதாரத் துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

 ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களை பொறுத்தவரை, விளையாடுவதும், சுற்றுவதுமாக உள்ளனர். அவர்களுக்கு வகுப்புகள் நடத்தாவிட்டால், படிப்பை மறந்து விடும் ஆபத்து உள்ளது. 

 கொரோனாவை காரணமாக வைத்து, பள்ளிகளை திறக்காமல் இழுத்தடிக்க கூடாது என, பெற்றோர் முறையிடுகின்றனர். வணிக மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, சிறுவர், சிறுமியரை, பெற்றோர் அழைத்து செல்கின்றனர். அதனால், பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில், பெற்றோருக்கு பிரச்னை இருக்காது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment