தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணை👇👇👇
No comments:
Post a Comment