12th பொதுத் தேர்வுக்கு தயாராகும் பள்ளிக் கல்வித்துறை. - Kalvimurasutn

Latest

Saturday, April 3, 2021

12th பொதுத் தேர்வுக்கு தயாராகும் பள்ளிக் கல்வித்துறை.

 சட்டசபை தேர்தல் முடிந்ததும், பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை முடுக்கி விட கல்வித்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ்2 பொதுத்தேர்வு மே 3ல் துவங்குகிறது. இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில், தேர்தல் முடிந்ததும் செய்முறை பொதுத்தேர்வுக்கு, ஒருவார காலம் செலவழிக்க வேண்டியிருக்கும்.இம்மதிப்பெண்களை, பள்ளி வாரியாக பெற்று தொகுக்க வேண்டும். இதற்கிடையில், விடைத்தாளுக்கு முகப்பு பக்கம் தைத்தல், தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பு பணிகளில், ஆசிரியர்கள் நியமித்தல் என அடுத்தடுத்த தேர்வு சார்ந்த, ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.இது சார்ந்து, தேர்தல் முடிந்ததும், கூட்டம் நடத்தி, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment