தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை - தமிழக அரசு.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எந்தவித தளர்வகளின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தடை விதிப்பு
தமிழகத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றியும் காய்கறி கடைகள் பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய நிறுவனத்தின் கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உடன் மற்றும் இரவு 11 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.
தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள் உயிரியல் பூங்காக்கள் அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதி.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவித்த 2 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1-7 -2010 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாடுதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி - தமிழக அரசு.
ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசு.
அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி.
ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.
ஏப்ரல் 10 தேதி முதல் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை.
பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை.
தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
வாடகை டாக்ஸியில் ஓட்டுனர் தவிர மூன்று பேர் அமர்ந்து செல்ல அனுமதி.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பேர் அமர்ந்து செல்ல அனுமதி.
No comments:
Post a Comment