தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை தமிழக அரசு ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உளளன.
தமிழகத்தில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் ஜூலை மாதம் பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அதற்கு முன்பு அனைத்துப்பள்ளிகளிலும் ஜூலையில் பொது தேர்வு நடத்த ஏதுவாக ரிவிசன் டெஸ்ட், மாடல் எக்ஸாம் போன்ற தேர்வுகளை ஆன்லைனில் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆன்லைன் தேர்வுக்கான வினாத்தாள்களை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி விடைகளை எழுதி வாங்க அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயின் பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment