பிளஸ் 2 தேர்வு நடைபெறும்; மாநில அளவில் நீட் தேர்வு: கல்வி அமைச்சர்கள் பேட்டி - Kalvimurasutn

Latest

Sunday, May 23, 2021

பிளஸ் 2 தேர்வு நடைபெறும்; மாநில அளவில் நீட் தேர்வு: கல்வி அமைச்சர்கள் பேட்டி

 தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அளவில் நீட் தேர்வை நடத்திக்கொள்கிறோம் என மத்திய அரசிடம் கோரியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

மத்திய கல்வி அமைச்சருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,



நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அதனை நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். வேண்டுமெனில் மாநில அளவில் நீட் தேர்வை நடத்திக்கொள்கிறோம் என்று கூறியுள்ளோம். 


செயலர் முதல் சி.இ.ஓ.,க்கள் வரை பள்ளி கல்வியில் விரைவில் மாறுதல்

மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் வேண்டுமானால் நீட் தேர்வினை நடத்திக்கொள்ளுங்கள். மாநில கல்லூரிகளுக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றார். 



அதன்பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும். மாணவர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தவில்லை எனில் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது மத்திய கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment