இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அறிவிப்பு.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் , மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் , மாநில கல்வித் திட்ட அடிப்படையில் , உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது முடிவு செய்ய குழு அமைக்கப்படும்
+2 வகுப்பு மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் - தமிழ்நாடு அரசு
இந்த குழு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கையளிக்கும்
உயர்கல்வி நிறுவனங்களில், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்
நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சரின் விரிவான அறிக்கை👇👇👇
No comments:
Post a Comment