நான்கு சேனல்களில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்," என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சி எடமலைப் பட்டி புதுாரில் உள்ள அரசு பள்ளியில் மாணவ - மாணவியகுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் வழங்கி, அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் படிப்பது வறுமை நிலை அல்ல. பெருமை நிலை என்று கருதும் சூழல் உருவாகி இருக்கிறது.
அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தேவையான வசதிகள் செய்யப்படும்.
தனியார் பள்ளிகளில், முழு கட்டணத்தையும் செலுத்துமாறு நெருக்கடி கொடுப்பதாக புகார் தெரி வித்தால், சம்பத்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
‘நீட்' தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக, நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி அறிக்கை யின் அடிப்படையில், நீட் தேர்வு பயிற்சி பற்றி முடிவு செய்யப்படும்.
தற்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒரு சேனலில், கல்வி தொலைக்காட்சி பாடம் கற்பிக்கப்படுகிறது. விரை வில், வகுப்புகள் வாரி யாக நான்கு சேனல்களில், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment