பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பா?
முதல்வர் நாளை ஆலோசனை
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்ட தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பிறகு சுழற்சிமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment