1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை - Kalvimurasutn

Latest

Tuesday, February 1, 2022

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை

 

 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.




கொரோனா தொற்றின் 3வது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்பாகவே பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால், 1 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு, தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைவதற்குள் அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கொரோனா பாதிப்பை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.

பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? 



பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment