மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் ஒப்புதல் - Kalvimurasutn

Latest

Friday, October 30, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் ஒப்புதல்

 


தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைமை சட்ட ஆலோசகரின் ஆலோசனை நேற்று தான் கிடைக்கப் பெற்றதாகவும்  அதன் பின்னரே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.


கல்வி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்அப் குழுவில் இணையவும் 



No comments:

Post a Comment