போட்டித்தேர்வு பயிற்சி மையம் அரசு பள்ளிகளில் அமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை - Kalvimurasutn

Latest

Sunday, October 25, 2020

போட்டித்தேர்வு பயிற்சி மையம் அரசு பள்ளிகளில் அமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை

 போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம், அனைத்து அரசு பள்ளிகளிலும் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பெற்றோர் முன்வைக்கின்றனர்.எட்டாக்கனியாக இருந்த 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் இந்தாண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட பயிற்சி திட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தன். இதுபோல், மத்திய அரசின், ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., கேட், யு.பி.எஸ்.சி., ஜே.இ.இ., போன்ற அனைத்து போட்டி தேர்வு குறித்த அறிமுகமும், பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பி.டி.ஏ., உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது

:மாநிலம் முழுதும் ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சிகளில், 500 ~ 600 பள்ளிகளில், 100 மாணவ, மாணவியர் படிக்கும் வகையில், உண்டு உறைவிட சிறப்பு மையம் உருவாக்கலாம். அனுபவம் பெற்ற கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி ஆசிரியர்களை முழு நேர பணியாளர்களாக நியமித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மேற்பார்வையில் அவற்றை செயல்படுத்த வேண்டும். 


No comments:

Post a Comment