கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு 8 மாதங்களை கடந்து விட்ட நிலையில், தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது என டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் தலைக்காட்ட துவங்கியது.
இதனால் அம்மாத இறுதியில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்குகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்க முடியாமல் பல மாநில அரசுகளும் திணறி வருகின்றன.
இந்த கல்வியாண்டின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளிலேயே கழிந்துவிட்டது. அதில் எந்த அளவு கற்றல் நிகழ்ந்தது என்பதையும் அறிய முடிவதில்லை.
குறிப்பாக கோடிக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் வழக்கம் போல பாடங்கள் நடக்கின்றன.
இந்த நிலையில் டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் பள்ளி திறப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். 'தற்போது வரை பள்ளிகளைத் திறக்க எந்த திட்டமும் இல்லை.
தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். விரைவில் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது. சூழல் முற்றிலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது' என்றார்.
No comments:
Post a Comment