திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு அடுத்த அனந்தபுரம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் தலைமை போளூர் கல்வி மாவட்ட அலுவலர் கலைவாணி, வீட்டு வசதி வாரிய துணைத்தலைவர் பொய்யாமொழி, பிடி ஓ கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் சுந்தர், படவேடு ஊராட்சி தலை வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் முன்னாள் கவுன் சிலர் ராஜாபாபு வரவேற்றார். எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு படவேடு, அனந்தபுரம், வாழியூர், காளசமுத்தி ரம், குப்பம், கல்குப்பம், கல்பட்டு ஆகிய 7 ஊராட்சிகளில் உடன்ன அனைத்து அரசு பள்ளிகளிலும் பணி புரியும் 223 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு சொந்த செலவில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். முடிவில் ஊராட்சி தலைவர் வளர் மதி அண்ணாமலை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment