ஏழை மற்றும் காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகள் 110 பேருக்கு இணையவழி கல்வி பயில ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் டேப்லட்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
கரோனா தொற்று பரவலையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம்நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லை னில் பயில செல்போன், டேப்லட், லேப்டாப் போன்றவற்றை வாங்க இயலாத மாணவர்களுக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் மகள் குனிஷா அகர்வால் உதவி வருகிறார்.
12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் குனிஷா, தனது மூத்த சகோதரி அர்ஷிதாவுடன் இணைந்து சமூக வலைதள பக்கம் ஒன்றை தொடங்கினார்
இதன்மூலம், ஏற்கெனவே பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள செல்போன், டேப்லட், லேப்டாப் போன்றவற்றை விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து பெற்று ஏழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்.
அதன்படி, திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், டேப்லட்களை 110 ஏழை மற்றும் காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் ஏ.அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.
No comments:
Post a Comment