அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 2500 ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Saturday, December 19, 2020

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 2500 ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

 


தைப்பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் இருப்பாளியில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தைப்பொங்கலையொட்டி 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கப்படும் என்றார். ஜனவரி 4-ம் தேதி முதல் ரூ.2,500 வழங்கப்படும். வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு, அதற்கேற்ப நியாயவில்லை கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020 தைப்பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment