பொது தேர்வு பாடத்திட்டம் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள்! மற்றும் பெற்றோர்கள்!!. - Kalvimurasutn

Latest

Friday, December 25, 2020

பொது தேர்வு பாடத்திட்டம் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள்! மற்றும் பெற்றோர்கள்!!.

 


பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான பாடத் திட்ட விபரங்களை அறிவிக்க வேண்டும்' என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், ஒன்பது மாதங்களாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், கல்வி 'டிவி' வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

 இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் அல்லது ஏப்ரலில் பொது தேர்வுகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது. அதற்கான பாடத் திட்டங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கொரோனா விடுமுறை காரணமாக, 35 சதவீத பாடத் திட்டங்களை குறைக்க, தமிழக அரசு அனுமதித்துள்ளது.

ஆனால், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை; பொது தேர்வுக்கான பாடத் திட்டங்கள் எவை என்பதை, பள்ளிக்கல்வி துறை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராக முடியாத நிலை உள்ளது.

எனவே, பொது தேர்வுக்கான பாட விபரங்களை, பள்ளிகள் வழியாகவும், இணையதளம் வழியாகவும் வெளியிட வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment