பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசனைக்கு பிறகே அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
முதல்வருடன் ஆலோசனை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில். " இந்த கல்வியாண்டில் பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விரிவான ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும்.
தற்போதைய சூழ்நிலை வேறு
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. கொரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கபட்டது. அப்போது உள்ள நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு. தமிழகத்தில் 11- புதிய மருத்துவ கல்லூரி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால் 7.5 இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
எப்போது திறப்பு?
முன்னதாக தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து வெளியிட்ட அரசாணைகள் ரத்து செய்யப்பட்டன. ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால் உருமாற்றம் அடைந்த கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் பொங்கலுக்கு பின் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment