கல்லூரிகள் திறப்பு குறித்து உயர் கல்வித்துறை ஆலோசனை! - Kalvimurasutn

Latest

Friday, December 25, 2020

கல்லூரிகள் திறப்பு குறித்து உயர் கல்வித்துறை ஆலோசனை!

 கல்லுாரிகளில் இறுதியாண்டு மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.



தமிழகம் முழுவதும், பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. ஒன்பது மாதங்களுக்கு பின், கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், ஜனவரி முதல் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளை துவங்கலாமா என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்ககத்தின் மண்டல அதிகாரிகள் தரப்பில், கருத்துக்கள் பெறப்பட்டு, உயர்கல்வி துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரியில், கல்லுாரிகளை துவங்குவது குறித்து, அறிவிப்பு வெளியாகவிருந்த நிலையில், திடீரென பிரிட்டன் நாட்டில் பரவும், உருமாறிய கொரோனா தொற்றால், முடிவுகள் எடுப்பது தள்ளிப் போயுள்ளது.வரும், 31ம் தேதி வரையிலான நிலவரங்களை ஆய்வு செய்து, சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெற்று, கல்லுாரிகளை திறக்கலாமா என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து, இம்மாத இறுதியில், உரிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment