தமிழக மின்சார வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்புவதற்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழக மின்வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி விவரம்: மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கானது. இதற்காக மின்சார வாரியமானது ரூ1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. தனியார் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ12,360. இந்த பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேர் வரை நியமனம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment