அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80 ஆயிரம் ஸ்மார்ட் ஃபோன்கள் - அமைச்சர் தகவல். - Kalvimurasutn

Latest

Sunday, January 31, 2021

அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80 ஆயிரம் ஸ்மார்ட் ஃபோன்கள் - அமைச்சர் தகவல்.

 பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



சிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர் கிராமத் தொழில்கள் நலவாரிய நலத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பாராட்டியுள்ளார். அதில், கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர்.

742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும். தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

ஏற்கனவே,பல்வேறு பள்ளிகளில் 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த உள்ளோம். இல்லையெனில், அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

ஆசிரியர் பணி நியமனத்தில் ஒரு சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

No comments:

Post a Comment