தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் பரவல் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட blue print பாடப் பகுதிகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும் 19 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அட்டவணையின் படி பாடங்கள் நடத்தவும், மேலும் மாணவ மாணவியர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment