பள்ளிகள் திறப்புக்கு ஏதுவாக தூய்மைப் பணிகள், வகுப்பறை கள் பிரித்தல் உள்ளிட்ட முன்னேற் பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற் போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது இதற்கான பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் அனைத்து பள்ளி களிலும் கடந்த 7, 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் சுமார் சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என கருத்து தெரிவித் திருந்தனர். இதையடுத்து பள்ளி களை ஜனவரி 3-வது வாரத் தில் திறக்க கல்வித் துறை திட்ட மிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடுவார் தெரிகிறது இந்த சூழலில் பள்ளிகளை திறக்க ஏதுவாகதூய்மைப்பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது
பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகளை மேல்நிலைப் பள்ளிகள் செய்து முடித்து தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது உள் ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களைக் கொண்டு வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், ஆய்வகங்கள், கழிப்பறைகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தனிநபர் இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தை சுற்றி கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதவும், ஆசிரியர்கள் மேற்பார்வையில் இப்பணிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment