தமிழ்நாடு குடிமைப்பணி வட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாகப் பணியமர்த்துதல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது. - Kalvimurasutn

Latest

Monday, January 11, 2021

தமிழ்நாடு குடிமைப்பணி வட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாகப் பணியமர்த்துதல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பணிகள் அலகு, பணி-1 பிரிவு


நாள் 11.01.2021 சார்வரி வருடம், மார்கழி 27 திருவள்ளுவர் ஆண்டு 2051



மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்ற வழக்கு எண் SLP(C) No.5588/ 2006, தீர்ப்பு நாள் 11.09.2018, 2. அரசாணை (2டி) எண்.190, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பணி.1) துறை, நாள் 19.10.2020. 3. அரசாணை (நிலை) எண்.807, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பணி.1)துறை, நாள் 29.12.2020 4. அரசாணை (2டி) எண்.232, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [E.1) துறை, நாள் 29.12.2020


கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண் பணி,1(3)/து.ஆ.01/2021, நாள் 06.01.2021


அரசாணை (டி) எண்.04


ஆணை

மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணை படி 2019-2020-ஆம் ஆண்டிற்கான பணி மாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர்களுக்கான தற்காலிகப் பட்டியல் அரசால் வெளியிடப்பட்டது. 2019-2020-ஆம் ஆண்டிற்கான பணி மாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர் களுக்கான தற்காலிகப் பட்டியலில் வரிசை எண்.1 முதல் 58 வரையில் மேலே 4-இல் படிக்கப்பட்ட அரசாணை வாயிலாக துணை ஆட்சியர்களாக பணியமர்வு செய்து அரசால் ஆணை வெளியிடப்பட்டது தற்போது அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வரிசை எண்.59 முதல் வரிசை எண்.108 வரையிலுள்ள வட்டாட்சியர் களை தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதி 10(a)()-ன் கீழ் தமிழ்நாடு குடிமைப்பணியில் கீழ்க்கண்டவாறு பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர் களாக அவர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் பணி நியமனம் செய்து இதன் மூலம் அரசாணை வெளியிடப்படுகிறது.

அரசாணை பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment