அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேசிய வருவாய் வழி (NMMS) தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்க ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தவர் தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (5ம் தேதி) முதல் வரும், 12ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.தலைமை ஆசிரியர் அவரவருக்கு வழங்கப்பட்ட தனித்தனி யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட் மூலம் 'எமிஸ்' அடிப்படையில் மாணவர் விவரங்களை பதிய வேண்டும். விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதை பள்ளி ஆவணங்களுடன் ஒப்பிட்டு இறுதி செய்த பின், பதிவேற்றம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment