தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!! - Kalvimurasutn

Latest

Wednesday, February 3, 2021

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!



 தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட நிலையில் பள்ளிகள் கொரோனா விதிகளை பின்பற்றி கிருமிநாசினி தெளித்தல் பணியை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

பள்ளிகள் மீது நடவடிக்கை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகளை திறந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி - அரசு வழங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) (Standard Operating procedures) எந்தவொரு குறைபாடும் இன்றி கண்டிப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முறையாக செயல்படுத்தாததை சுட்டிக்காட்டி உத்தரவு!

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, 

“தமிழகத்தில் பெறோர்கள் மற்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.

அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து- அரசாணை

மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 65 சதவீதமும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பிற்கு 55 சதவீதமும், 1 முதல் 8-ம் வகுப்பிற்கு 50 சதவீதமும் பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஐஐடி நிறுவனம் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுக்கான வகுப்புகள் நடத்துகிறது. அதில் 750 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதனை 2000 மாணவர்களாக மாற்ற அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வகுப்பறைகளை பள்ளி நிர்வாகம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment