ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்? பிப்ரவரி 10ஆம் தேதி முக்கிய ஆலோசனை. - Kalvimurasutn

Latest

Saturday, February 6, 2021

ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்? பிப்ரவரி 10ஆம் தேதி முக்கிய ஆலோசனை.

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ளார்.



தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடத்தப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தேர்தல் அட்டவணை அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்டோர் வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ளனர்.

தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளன, எந்த தேதியில் தேர்தல் நடத்தினால் மக்களுக்கு வசதியாக இருக்கும் உள்ளிட்டவை குறித்து அரசு தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment