தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்காக இலவச டேப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இலவச டேப்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் முழு அளவில் திறக்கப்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் வீடு வசதி வாரிய பிரிவு, பல்லடம் அருகே உள்ள மங்கலம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்தும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கல்வித்துறையை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை பற்றி விளக்கினார். அரசு பள்ளிகளில் மேம்படுத்த அரசு சார்பில் ரூ.317 கோடி செலவில் சுற்று சுவர் அமைத்தல், பள்ளி பராமரிப்பு, வகுப்பறை கட்டடம் கட்டுதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இலவச ஷு வழங்கப்படும். மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த இலவச டேப் வழங்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment