"ஷிப்ட்" முறையில் அரசு பள்ளிகள் இயக்கம். - Kalvimurasutn

Latest

Tuesday, February 9, 2021

"ஷிப்ட்" முறையில் அரசு பள்ளிகள் இயக்கம்.

 


கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி பகுதியில், 11 அரசினர் மேல்நிலைப் பள்ளிகள், ஏழு அரசினர் உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுடன், ஜனவரி மாதம், 19ம் தேதி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, வகுப்புகளும், நேற்று முதல், ஒன்பது மற்றும் பிளஸ் 1, வகுப்புகளும் துவங்கப்பட்டன.ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் மட்டுமேஅமர வேண்டும் என்பதால், வகுப்பறைகள்இருந்தும், ஆசிரியர்கள் தட்டுப்பாடு காரணமாக, மேற்கண்ட பள்ளிகளில், அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகள் அனைத்தும், 'ஷிப்ட்' முறையில் இயங்கி வருகின்றன.குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வாரத்தில் மூன்று நாட்கள், பத்து மற்றும் பிளஸ் 2, மாணவியர், மற்ற மூன்று நாட்கள், ஒன்பது மற்றும் பிளஸ் 1, மாணவியர் என, பிரித்து வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.இதேபோன்று, கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பது முதல், பிளஸ் 2, வரையிலான மாணவர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு பிரிவுக்கும், வாரத்தில் மூன்று நாட்கள் என, வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சில பள்ளிகளில், பிளஸ் 1, வகுப்புகள் மட்டும் வாரத்தில், மூன்று நாட்களுக்கு எடுக்கப்படுகின்றன. ஒரு சில வாரம் கடந்த பின், தினசரி வகுப்புகள் முறைப்படுத்தப்படும் என, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment