அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன் பணமாக ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ அரசு சார்பாக முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது. அதாவது, அரசு பணியில் உள்ள ஊழியர்கள் சொந்தமாக நிலத்தை வாங்கி வீடு கட்டவும் அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கவும் தமிழக அரசு சார்பாக முன்பணம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு முன்பணமாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூபாய் 40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடு கட்டுவதற்கான முன் பணத்தை ரூபாய் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையை பெற click download
No comments:
Post a Comment