தமிழக இந்து சமய அறநிலையத்துறை மூலம் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பான் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாளம், சுருதி, காயாமொழி கோயில் அர்ச்சகர், காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அத்தியான வாத்தியார், குலசை கோயில் தேவாரம், குலசை கோயில் மடப்பள்ளி, தட்டச்சர், ஜெனரேட் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், ஜூனியர் இன்ஜினியர், பிளம்பர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான விண்ணப்ப முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தமிழக அரசு பணியிடங்கள் !!
இராமேஸ்வர கோவிலில் இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாளம், சுருதி, காயாமொழி கோயில் அர்ச்சகர், காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அத்தியான வாத்தியார், குலசை கோயில் தேவாரம், குலசை கோயில் மடப்பள்ளி, தட்டச்சர், ஜெனரேட் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், ஜூனியர் இன்ஜினியர், பிளம்பர் பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கல்வித்தகுதி :
- இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
- தவில், தாளம், சுருதி – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் தேர்ச்சி
- காயாமொழி கோயில் அர்ச்சகர், காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அத்தியான வாத்தியார் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் தேர்ச்சி
- குலசை கோயில் தேவாரம் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. தேவார பாடசாலையில் தேர்ச்சி
- குலசை கோயில் மடப்பள்ளி – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்
- தட்டச்சர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு தேர்ச்சி மற்றும் Computer Application and Office Automation தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- ஜெனரேட் ஆபரேட்டர் – அரசு பயிற்சி நிறுவனத்தில் தேர்ச்சி சான்று
அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். - ஜூனியர் இன்ஜினியர் – மின்னியல் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- பிளம்பர் – அரசு பயிற்சி நிறுவனத்தில் குழாய் பணிக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.11,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் 623 526 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment