மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது. 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு நாளை திறக்கப்படும் நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment