தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தார்.
இதற்கிடையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பில் சேர்வதற்கு ஏற்ப தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடங்களுக்கான மதிப்பெண்கள் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படாது என்றும் பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் அவர்கள் தேர்வு செய்யும் பாட பிரிவுகளுக்கு ஏற்ப முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.மேலும் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு ஏற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment