9 முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை - Kalvimurasutn

Latest

Sunday, March 14, 2021

9 முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை

 



தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே 3 முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 9, 10, 11ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment