தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுகலை ஆசிரியர் மற்றும் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை பணியிடங்கள், 236 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 2,098 காலிப்பணியிடங்கள் உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
அதற்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், அந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி விண்ணப்பிக்க முதுகலை பட்டதாரிகள் தயாராகினர்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து விண்ணப்பிக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். அதற்கு பின்னர் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிகை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு வருடம் முழுவதும் இவ்வாறு கொரோனாவால் முடிவடைந்துள்ளது. இதனால் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுகள் குறித்து மறந்து விட்டனர்.
எனவே தேர்வுக்கு தயாராகி வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். மேலும் அவர்களுக்கான தேர்வுகளும் விரைவாக நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment