தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அலகு தேர்வுகளை நடத்துவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள் அனுப்ப வேண்டும் என்றும் விடைத்தாளில் பெயர் மற்றும் தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவு எண் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாட்ஸப் குழுவில் வினாத்தாள் விடைத்தாள் தவிர இதர செய்திகள் வீடியோக்களை பதிவிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment