தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் செலவை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இந்த திட்டத்தை யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது குறித்து இதில் பார்க்கலாம்..
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மேம்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்பதற்காக அரசல் தொடங்கப்பட்டது தான் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்.. பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது..
மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி, நோய் கண்டறியும் சோதனைகளும் தொடர் சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும்..
தகுதியானவர்கள் யார்..?
ரூ.72,000-க்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருப்பவர்கள், முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை பெற தகுதியானவர்கள்
என்னென்ன ஆவணங்கள் தேவை..?
- குடும்ப அட்டை
- வருமான சான்றிதழ்
- ஆதார் அட்டை
- எப்படி பெறுவது..?
குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும், காப்பீட்டு அடையாள அட்டை மையத்தில் சமர்பித்து காப்பீட்டு அட்டையை பெற்றுக்க்கொள்ளலாம்..
அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு திட்ட இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம்.. இந்த திட்டத்தின் கீழ் ஒரு அட்டைக்கு அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.
கொரோனாவுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சைகள்
- ஆர்டிபிசிஅர் கொரோனா பரிசோதனை
- தீவிரமில்லாத மிதமான் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை
- செயற்கை சுவாச உதவியுடன் கூடிய தீவிர மருத்துவ சிகிச்சை
- அவசர மருத்துவ சிக்கிசை
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துமனைக்கு செல்லும் முதல் நாளே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுகிறோம் என்பதை கூறி, மருத்துவமனையில் சேர்ந்தால் எந்த கட்டணமும் செலுத்த வேண்டும். சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் அரசே ஏற்கும்.
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.. https://www.cmchistn.com/covid_empanlled_hospital.php
நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதால், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை புதிதாக பெற அல்லது புதுபிக்க விரும்புபவர்கள்ல் 1800 425 399 என்ற எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் மாவட்டத்தை தெரிவிக்க வேண்டும்.. அவர்கள் வழங்கும் மாவட்ட அதிகாரியின் எண்ணை பெற்றுக் கொண்டு, நேரம் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்லலாம்.
No comments:
Post a Comment