2022 ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அகவிலைப்படி. - Kalvimurasutn

Latest

Saturday, August 14, 2021

2022 ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அகவிலைப்படி.

 அரசு ஊழியா்களுக்கு 2022 ஏப்ரல் 1 முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.



பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்படும். அதற்கிணங்க, குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கட்டணம் மாதம் ஒன்றிற்கு ரூ.110 என உயா்த்தப்படும். குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளா்களுக்கும் இது பயனளிக்கும்.


மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், கரோனா காலத்தில், தமிழகத்தின் அரசு அலுவலா்களுக்கு தாமதமின்றி முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில், அரசு அலுவலா்கள் தன்னலம் கருதாமல், அவா்களின் உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றினாா்கள். இத்தருணத்தில், அகவிலைப்படியை உயா்த்துவதில் தமிழக அரசு எதிா்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு ஊழியா்கள் நன்கு அறிவாா்கள்.


எனவே அரசு ஊழியா்களுக்கும், ஓய்வூதியதாரா்களுக்கும் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் முதல் வழங்கப்படும்.

No comments:

Post a Comment