காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை படித்து வருகின்றனர். தற்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், முழுவதுமாக சுத்தம் செய்து, கிருமிநாசினிகள் தெளித்து, பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல், தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் தெரிவிக்கபட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் அனைத்து பள்ளிகளின் சுற்றுச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment