ஆசிரியரை மதிக்கும் நாடு - 6 வது இடத்தில் இந்தியா - Kalvimurasutn

Latest

Tuesday, October 27, 2020

ஆசிரியரை மதிக்கும் நாடு - 6 வது இடத்தில் இந்தியா

 ஆசிரியரை மதிக்கும்‌ நாடு 6வது இடத்தில்‌ இந்தியா உள்ளது' என, லண்டன்‌ அறக்கட்டளையின்‌ ஆய்வு முடிவுகள்‌ கூறுகிறது. 

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதுகுறித்த மதிப்பீடு செய்யும்‌ ஆய்வு நடத்தப்பட்டது. உலகில்‌, 95 நாடுகளில்‌ நடந்த ஆய்வின்‌ மூடிவுகள்‌, தற்போது வெளியாகி உள்ளன; இதில்‌, நம்‌ நாடு, கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ள ஆசிரியர்‌ களுக்கு, கவுரவம்‌ அளிக்கும்‌ நாடுகளின்‌ பட்டியலில்‌ சீனா, கானா, சிங்கப்பூர்‌, கனடா. மற்றும்‌ ரஷியாவுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பெற்றுள்ளது... இதுகுறித்து, அறக்கட்டளையின்‌ நிர்வாகி சன்னி வாகி கூறியதாவது? 

ஒவ்வொரு நாட்டிலும்‌, 2,௦௦௦ பேரிடம்‌ ஆசிரியர்கள்‌ குறித்த கருத்துக்கள்‌ பெறப்பட்டன. அதன்‌ அடிப்படையில்‌, நாடுகளை பட்டியலிட்டதில்‌, இந்தியா ஆறாவது இடத்தில்‌ உள்ளது. 'பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள்‌ மற்‌றும்‌ பட்ஜெட்டில்‌ கல்வித்துறைக்கு அதிக ஒதுக்‌கீடு செய்யும்‌ நாடுகளில்‌ ஆசிரியர்களின் மதிப்புடன் இருக்கின்றனர்‌. உலகம்‌ முழுதும்‌, கொரோனா பாதிப்பிற்கு நடு விலும்‌ மாணவர்களுக்கு கற்பிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபடுவதில்‌, ஆசிரியர்கள்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ இருப்பதை அறிந்தோம்‌. 

இதனால்‌, உலகளாவிய சிறந்த ஆசிரியர்‌ பரிசு திட்டத்தை நாங்கள்‌ உருவாக்கினோம் "இதில்‌, 75. லட்சம்‌ ரூபாய்‌ பரிசு பெறுபவர்‌ குறித்து முடிவு செய்வதற்காண, 'இறுதி பட்டிய உருவா உள்ளோம்‌. இந்த பட்டியலில்‌, இந்தியாவின்‌. மஹாராஷ்டிரா மாநில கிராமத்தின்‌ பள்ளி ஆசிரியர்‌ ரஞ்சித்சிங்‌ டிசாலே பெயரும்‌ இடம்பெற்றுள்ளது. இவ்வாறு, அவர்‌ கூறினார்‌.


No comments:

Post a Comment