கற்பூரம் எப்படி கிடைக்கிறது? - Kalvimurasutn

Latest

Wednesday, October 21, 2020

கற்பூரம் எப்படி கிடைக்கிறது?

 உலகத்திலேயே கற்பூரத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான் என்றாலும், ஜப்பான் சீனாவில் தான் கற்பூர மரங்கள் அதிகம். கற்பூர மரங்கள் இப்போது நம் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது கற்பூர மரங்கள் நன்கு வளர்ந்து, முற்ற வேண்டும் மற்றும் கற்பூர மரம் முற்றுவதற்கு 70 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 1938ஆம் ஆண்டு பயிரிடப்பட்ட கற்பூர மரங்கள் இப்போதுதான் கற்பூரம் தயாரிக்கக்கூடிய பக்கத்திலிருக்கும்.

            சரி இந்த கற்பூரம் மரங்களிலிருந்து எப்படி கற்பூரம் கிடைக்கிறது? 70 வயதான முற்றிய கற்பூரம் மரத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி தண்ணீரோடு சேர்த்து 36 மணி நேரம் கொதிக்க வைத்து அதனுடைய ஆவியை குளிர வைக்கிறார்கள் பிறகு அதன் மூலம் கிடைக்கக்கூடிய உப்பு போன்ற வெண்மை நிற படிவங்கள்தான் கற்பூரம். இது ஒரு பூஜை பொருள் மட்டுமல்ல ஒரு கிருமி நாசினியும் கூட போட்டோ பிலிம் சினிமா பிலிம்ஸ் தயாரிக்க கற்பூரம் இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய கற்பூரம் விலை அதிகம் என்பதால் சில நிறுவனங்கள் ரசாயன பொருட்களை பயன்படுத்தி செயற்கைக்கோள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

No comments:

Post a Comment