தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - திருவண்ணாமலை மாணவர் முதலிடம் - Kalvimurasutn

Latest

Saturday, October 24, 2020

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - திருவண்ணாமலை மாணவர் முதலிடம்

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான பொது தரவரிசை பட்டியல் வெளியிட்டப்பட்டது. அதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரவீன்குமார் முதலிடம் பெற்றார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது.

இந்த கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளங்கலை பட்ட படிப்புகளுக்கு நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணையதளம் வாயிலாக நடைபெற்றது.இதில், மொத்தம் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இதனால், கடந்த 15-ஆம் தேதி பொதுதரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் குமார், பொதுதரவரிசை பட்டியலை வெளியிட்டார். அதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரவீன்குமார் முதலிடம் பிடித்தார்.பெரம்பலூரை சேர்ந்த கிரிவசன் இரண்டாம் இடமும், ராசிபுரத்தை சேர்ந்த மாணவிப புஷ்கலா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பல ஆண்டுகளாக தரவரிசை பட்டியலில் மாணவிகளே முதலிடத்தை பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் ஒருவர் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வரும் 28-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment