NEET வந்த பிறகு 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் - Kalvimurasutn

Latest

Saturday, October 24, 2020

NEET வந்த பிறகு 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

 நீட் வந்த பிறகு 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

நீட் தேர்வு அறிமுகமானபிறகு, தமிழகத்தில் 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் 2015-2016 முதல் 2018-19ம் ஆண்டு வரை எத்தனை அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மருத்துவ கல்வி இயக்குநரகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அளித்துள்ள பதிலில், 2015-2016 மற்றும் 2016-2017-ல் மட்டும் 1,047 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும், 2017-ம் ஆண்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின், 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment